கொரோனா விவகாரத்திலும் அதிரடி காட்டும் ரூபா ஐபிஎஸ்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 29 2020]

 

கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத்துறை டிஐஜி யாக இருந்தவர் ரூபா ஐபிஎஸ். இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது, இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் பங்குண்டு என வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். இதனால் நேர்மையான அதிகாரியாகவும் அதிரடிக் காட்டுபவராவும் ஊடகங்கள் மத்தியில் புகழப்பட்டார். பின்னர் வடமாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது கர்நாடக காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டன. அதையடுத்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மண்டல வாரியாக ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்து இருந்தார். அந்த வகையில் பெங்களூர் மண்டல கண்காணிப்புக் குழு தலைவராக இருந்துவரும் ரூபா ஐபிஎஸ் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப் பட்டதாகக் கருதப்படும் கூடுதல் தொகையை மீட்டு மக்களிடம் திரும்பி வழங்கியிருக்கிறார். கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.24.80 லட்சம் பணத்தை மீட்டு பொது மக்களிடமே இவர் வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் 50 விழுக்காடு படுக்கையை ஒதுக்க வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை அம்மாநில அரசு கூறியிருக்கிறது. ஆனால் சில மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அட்வான்ஸ் பணமாக முன்னமே ரூ. 50 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு படுக்கையை புக் செய்து வைத்திருப்பதாகவும் தற்போது குற்றச்சாட்டம் பட்டுள்ளது. இப்படியான பல விவகாரங்களை ரூபா ஐபிஎஸ் விசாரணையில் வெளிப்படுத்தி இருக்கிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

More News

உண்மையிலேயே கொரோனாவின் பிறப்பிடம் இதுதான்… உறுதிப்படுத்திய உலக விஞ்ஞானிகள் குழு!!!

கொரோனா வைரஸின் பிறப்பிடம் எது என்பதைக் குறித்து உலக விஞ்ஞானிகள் 3 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினியும், கமலும் சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்: மநீம பொதுச்செயலாளர் 

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியலுக்கு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணி மட்டுமின்றி

பொது இடத்தில் காதலருக்கு லிப்லாக் கொடுத்த நடிகை: வைரலாகும் வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை பூனம்பாண்டே தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றினார் என்பதையும்

என்னுடைய அரசியல் வாழ்வு ரஜினி ஆதரவோடு முடிந்துவிடும்: அரசியல் கட்சி தலைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்க இருப்பதாகவும், தான் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி, வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில்

சீனாவில் இருந்து பார்சலில் வந்த மர்ம விதைகள்: அதிர்ச்சியில் அமெரிக்கா!

சீனாவில் இருந்துதான் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் திண்டாடிக் கொண்டிருக்கும்