ரூ.2000 நோட்டு குறித்து வாட்ஸ் அப்பில் பரவும் பயங்கர வதந்தி

  • IndiaGlitz, [Tuesday,November 22 2016]

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். அதன்பின்னர் இந்தியாவில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ரூ.2000 நோட்டு சாயம் போவதாகவும், தேவநாகரி எழுத்துக்கள் பதிவு செய்துள்ளதாகவும், சிறுபிள்ளைகளின் விளையாட்டு ரூபாய் போல் இருப்பதாகவும், இந்த நோட்டில் எலக்ட்ரானிக் சிப் இருப்பதாகவும், பலவேறு செய்திகளும் வதந்திகளும் பரவின
அந்த வரிசையில் தற்போது இன்னொரு வதந்தி இந்த ரூ.2000 நோட்டு குறித்து வாட்ஸ் அப்பில் மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது யுனெஸ்கோ சற்று முன் வெளீயிட்ட ஒரு அறிவிப்பில் உலகிலேயே சிறந்த கரன்சியாக ரூ,.2000 நோட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதுதான்.
ஆனால் இந்த செய்தியில் சிறிதும் உண்மை இல்லை. ஆனால் இந்த உண்மை தெரியாமல் பலர் இந்த வதந்தியை நம்பி தங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.