ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த வதந்திக்கு மறுப்பு

  • IndiaGlitz, [Thursday,June 16 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தியால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் ரஜினி அமெரிக்காவில் நலமாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்னும் ஒருசில நிமிடங்களில் ரஜினிகாந்த் நேரடியாக தனது சமூக இணையதளத்தில் இதுகுறித்து பதிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ள ரஜினியின் குடும்பத்தினர் ரஜினியின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

More News

பிரபுதேவா-தமன்னா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் திகில் படமான 'தேவி எல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கேரள ரசிகைகளின் மகத்தான சேவை

இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி வரவுள்ளதை அடுத்து அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள்...

'கபாலி'யின் 2வது டீசர் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

விக்ரம்பிரபுவின் 'வாஹா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக வாரீசான விக்ரம்பிரபு 'கும்கி' முதல் ''இது என்ன மாயம்' வரை பல வெற்றிப்படங்களில் நடித்தவர்...

ரஜினியை வம்புக்கிழுத்த பிரபல இயக்குனருக்கு வெங்கட்பிரபு பதிலடி

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வாங்கிக்கட்டி கொள்வது என்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான்...