அஜித்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்?

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

தல அஜித்துக்கு சினிமாவை தவிர வேறு எதில் விருப்பம் என்று கேட்டால் பைக், கார், போட்டோகிராபி, சமையல் என்று சின்னக்குழந்தை கூட சொல்லும். ஆனால் தப்பி தவறி ஒருவர் கூட அவர் அரசியலுக்கு வருவார் என்று இதுவரை யாருமே சொன்னதில்லை. ஆனால் ஒருசில ஊடகங்கள் குறிப்பாக அண்டை மாநிலத்து ஊடகங்கள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அஜித் தான் என்று செய்தி வெளியிட்டு வருகின்றன
இந்த செய்தியை நல்லவேளை அதிமுக தொண்டர்கள் உள்பட யாரும் சீரியஸ் ஆக எடுத்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை பற்றி எதையாவது எழுதினால்தான் கல்லா கட்ட முடியும் என்ற ஒரே காரணத்திற்காக அஜித் குறித்து தங்கள் கற்பனை குதிரையை கட்டவிழ்த்துவிட்டு ஒருசில ஊடகங்கள் கதை எழுதி கொண்டிருக்கின்றன. இந்த பொய்க்கதைகள் எல்லாம் அஜித் காதுக்கு சென்றதா என்பது தெரியவில்லை. அப்படியே சென்றாலும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கூறிவிட்டு அவர் தன் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார் என்பதுதான் நிதர்சணமான உண்மை. நமக்கு தெரிந்து அஜித் திருமணத்திற்கு ஜெயலலிதா நேரில் வந்து வாழ்த்தினார் என்பதை தவிர வேறு எந்த சம்பந்தமும் இருவருக்கும் இருப்பதாக தெரியவில்லை.
ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவை கட்டிக்காக்க பல மூத்த தலைவர்கள் அதிமுகவிலேயே இருக்கின்றனர். அனுபவம் வாய்ந்த தலைவர் ஒருவர் நிச்சயம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை வழிநடத்தி செல்வார். எனவே அஜித்துக்கும் அதிமுகவுக்கும் போடும் கற்பனை முடிச்சை இனியாவது ஊடகங்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

More News

சூரிய ஒளி மூலம் தமிழ் நடிகருக்கு ஆசி வழங்கிய அமரர் ஜெயலலிதா

கருப்பசாமி குத்தகைதாரர், தீநகர், அராத்து உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் விஜய்கார்த்க்திக். இவர் கடந்த 2014ஆம்...

ஜெயலலிதா நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில்...

திரையுலகினர்களுக்கு ஒரு நற்செய்தி. தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்பட்டது

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் முன்போ அல்லது வெளியான சில மணி நேரங்களிலோ...

சென்னை 600028 II' ரசிகர்களுக்கு கிடைத்த 4 நிமிட விருந்து

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள 'சென்னை 600028 II' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

இன்று முதல் 'மாவீரன் கிட்டு'வுக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், ஸ்ரீதிவ்யா நடித்த 'மாவீரன் கிட்டு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது...