எது சூரியனில் இருந்து கொரோனா வேவ் வருதா?!.. வாட்சப் வதந்திகளை நம்பாதீர்கள் மக்களே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
"நாளை சூரிய ஒளியில் மக்கள் உலவினால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும்" என லதா மேடம் என்பவர் பேசும் வாட்சப் ஆடியோ வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். சூரிய ஒளி மீது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கிவிடும்.
இந்த வகை வைரஸானது சூரிய ஒளியின் மூலமாக எல்லாம் பரவாது. ஏற்கனவே தொற்று உள்ள ஒருவர் தும்மும் போதோ.. இருமும் போதோ அடுத்தவருக்கு நோய் தொற்றிக் கொள்ளும். எனவே தான் மத்திய அரசானது ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு போட்டு எல்லோரையும் தனிமைப்படுத்த விரும்பியது. பெரும்பாலும் நோய் தொற்றுள்ள ஒரு மனிதரை சந்திக்காமல் இருந்தாலே நோய் பரவலை தடுத்துவிடலாம். நோய் அறிகுறி இருப்பவரோ நோய் வரமால் தடுக்க நினைப்பவரோ எங்கும் செல்லாமல் புதியவர்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தாலே இந்த நோய் பரவலை கட்டுப்படுத்திவிடலாம். இதுதான் உண்மை. இதற்காகத்தான் மத்திய அரசு ஒருநாள் ஊரடங்கு உத்தரவை வெளியிட்டது.
மேலும் இந்த ஒருநாள் ஊரடங்கானது பெரும்பாலும் அடுத்தடுத்து வரப்போகும் தொடர் ஊரடங்கிற்கு ஒத்திகையாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊரடங்கை சாக்காக வைத்து வாட்சப் வாயன்கள் புரளியை பரப்ப தொடங்கிவிட்டனர். ஏற்கனேவே இதுபோல புரளி பரப்பி பூவிருந்தமல்லியிலும், நாமக்கல்லிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் வதந்திகளை நம்பாமல் இருப்பது நல்லது. பயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக இருங்கள் பயத்தினை தவிருங்ககள். முதலில் வாட்சப்பில் வரும் எல்லாமே உண்மையல்ல என்பதை உணருங்கள். அரசானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அறிவிப்புக்கள் சரியான ஊடகங்கள் மூலமாக உங்களை வந்தடையும். தவிர லதா மேடம் ஒன்னும் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவர் சொன்ன முக்கிய தகவலை பயத்தோடு மற்றவர்களுக்கு பகிர. முதலில் யார் அந்த லதா மேடம்..?!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments