ராகவா லாரன்ஸ் - ஜிவி பிரகாஷ் படத்தின் அட்டகாசமான டைட்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவாகிய ‘லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ‘லட்சுமி பாம்’என்ற படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.
5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை செய்தி தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணையும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ’ருத்ரன்’ என்ற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்கும்போது இதுவொரு திகில் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வா என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are happy to announce Title look of @offl_Lawrence 's Rudhran #RudhranbyFivestarcreations
— Five star Kathiresan (@5starcreationss) October 29, 2020
Happy Birthday @offl_Lawrence sir@gvprakash pic.twitter.com/bGYF83wPPb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments