ஊடகங்களின் கருத்துகணிப்புகள் திரு. ரூபி மனோகரனின் வெற்றியை உறுதி செய்கிறது
- IndiaGlitz, [Tuesday,March 30 2021]
தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாங்குநேரி தொகுதி வேட்பாளர் திரு.ரூபி மனோகரன். இவர் தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார். தொகுதியில் உள்ள மக்களுக்கு இவர் நல்ல அறிமுகம் என்பதால் மக்களை அவர் சந்திக்கும் போது மக்கள் அவரிடம் நன்றாக பேசி வரவேற்கிறார்கள்.
இவர் சென்னையில் தலைசிறந்த கட்டுனர்களில் ஒருவர் என்பதால் தொழிலதிபராக இவரின் அறிமுகம் எல்லோரிடமும் உள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்று 1000 வீடுகளுக்கு மேல் கட்டியுள்ள இவர் கண்டிப்பாக தங்கள் தொகுதியை சிறப்பாக கட்டமைப்பார் என்ற பெரும்நம்பிக்கை மக்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்கள் அங்கு சமீபத்தில் சென்று வந்தவர்கள். கூட்டணி மற்றும் தங்கள் கட்சி அறிவித்துள்ள திட்டங்கள் தவிர்த்து அவர் தன்னுடைய தொகுதி மக்களுக்கு என்று பிரத்தேயமாக அறிவித்துள்ள திட்டங்கள் ஒவ்வொன்றும் அங்கே இருக்கும் பெண்கள் மற்றும் இளைஞர்களை ஈர்த்துள்ளது என்ற தகவலையும் நம்மிடம் பேசியவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அத்தொகுதியில் உள்ள பெரும்பாலானோர் வியாபாரம் மற்றும் சுய தொழில்களிலேயே பெரும்பாலும் கவனம் செலுத்தி வருவதால் அவர்களுக்கு எடுத்துகாட்டாக தொழில் துறையில் முன்னோடியாக இருக்கும் திரு. ரூபி மனோகரன் அவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினாராக வந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை பல இடங்களில் பயணிக்கும் போது இயல்பாகவே கேட்க முடிகிறது என்கிறார்கள்.
இதுதவிர தமிழகத்தில் உள்ள முன்னணி பத்திரிகைகள் மற்றும் பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் திரு. ரூபி மனோகரன் தான் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில செய்தி ஊடகங்கள் இவர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அத்தொகுதியில் வெல்வார் என்று அறுதியிட்டு உறுதி கூறுவதை நம்மால் காண முடிகிறது.
வெற்றி பெற்ற பின்னர் தொகுதியிலே தங்கி பணியாற்றவுள்ளேன் என்று திரு. ரூபி மனோகரன் மக்களிடம் உறுதியளித்து வருவது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது தவிர்த்து தேர்தல் அறிவிப்பதற்கு முன்னேரே அவர் அங்கேயே தங்கி பணியாற்றிவருவதால் அனைவரையும் அவர் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பரிட்சயமாகிவிட்டார் என்பது தான் உண்மை.