திமுக=ரவுடிசம்? தோலுரிக்கும் ஓய்வுப்பெற்ற அதிகாரியின் பிரத்யேக நேர்காணல் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,May 05 2021]
தமிழக அரசியலில் ஒரு வலுவான மற்றும் மறுக்க முடியாத கட்சியாக திமுக இருந்து வருகிறது. இந்நிலையில் திமுக என்றாலே ரவுடிசம் என்ற விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனத்தில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது. அல்லது அரசியல் காரணமாக இப்படி விமர்சிக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு இருப்பது இயல்பான ஒன்று.
இந்நிலையில் திமுக அரசியல் வரலாற்றில் அந்தக் கட்சி தன்னை எப்படி நிலை நிறுத்திக் கொண்டது? தேர்தல் நேரத்தில் என்ன வகையான அணுகுமுறையைக் கொண்டு இருக்கும்? உண்மையிலேயே திமுகவில் ரவுடிசம் இருந்ததா? அல்லது தற்போதைய தலைமை வரைக்கும் அந்த குணம் நீடித்துக் காணப்படுகிறதா? தமிழக அரசியலுக்கு இதுபோன்ற குணாம்சங்கள் தேவைதானா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ஓய்வு பெற்ற மூத்த காவல் துறை அதிகாரி திரு வரதராஜன் அவர்கள் பதில் அளித்து உள்ளார்.
இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. காரணம் நேற்று சென்னை முகப்பேரு பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை சில திமுக தொண்டர்கள் அடித்து நொறுத்தியதாகப் பரபரப்பு கிளம்பியது. திமுக வரும் மே 7 ஆம் தேதி தமிழகத்தில் ஆட்சியமைக்க இருக்கிறது. இப்படி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே திமுக தொண்டர்கள் எதிர்க்கட்சி தொடங்கிய சமூகநலத் திட்டத்தின்மீது வெறுப்புக் காட்டுவதா? என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்.
அதோடு திமுக ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பு விஷயங்கள் அதிகரித்து விடும் என்றொரு விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் இதுபோன்ற விமர்சனத்தில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது. இதை தமிழக மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். அதோடு ஆட்சிக்கு வரும் திமுக தலைமை இந்த விமர்சனங்களை எல்லாம் கருத்தில் கொண்டு எப்படி ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என திரு வரதராஜன் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.