மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75 மட்டுமே டிக்கெட் கட்டணம்: அதிரடி அறிவிப்பு!

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இந்த தினத்தின் போது திரையரங்குகளில் சலுகை விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தேசிய சினிமா தினமான செப்டம்பர் 16ஆம் தேதி இந்தியாவில் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ் உள்பட பல்வேறு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 ஸ்கிரீன்களில் டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

இதனால் செப்டம்பர் 16ஆம் தேதி அன்று இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூபாய் 75 மட்டுமே கொடுத்து சினிமா ரசிகர்கள் படம் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.