காவலர்களுக்கு நிவாரணத் தொகை ....! முதல்வர் உத்தரவு....!
- IndiaGlitz, [Friday,June 18 2021]
கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய காவலர்களுக்கு 5000 ரூபாயை நிவாரணத்தொகையாக வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்
கொரோனா காலங்களில் முன்களப்பணியாளர்களாக காவல் துறையினர் கடுமையாக வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருசில காவலர்களும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் களப்பணியாளர்களாக இருக்கும் ஒரு லட்சத்து 17,184 காவலர்களுக்கு, தலா ரூ.5000 நிவாரணத்தொகை வழங்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக சுமார் ரூ.58.59 கோடி நிதியை அரசு
ஒதுக்கியுள்ளது. இந்த ஊக்கத்தொகை மூலம் முதல் காவல் ஆய்வாளர் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை அனைவரும் பயன் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.