ராகவா லாரன்ஸ் கொடுத்த அடுத்த ரூ.50 லட்சம்: யாருக்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே கிட்டத்தட்ட ரூபாய் 4 கோடி அளவிற்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக அவர் ரூபாய் மூன்று கோடி மத்திய, மாநில அரசுகளுக்கும், பெப்சி, நடன சங்கத்திற்கும் நிதியுதவி செய்த நிலையில் அதற்கு பின்னர் நடிகர் சங்கத்திற்கும் சென்னை செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்திற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் ஒருசில லட்சங்களை அள்ளிக் கொடுத்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது அடுத்த கட்டமாக ரூபாய் 50 லட்சம் அம்மா உணவகத்திற்கு வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் மற்றும் பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் மக்கள் பசியுடன் வாடிய நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே உணவு கிடைக்கும் இடம் அம்மா உணவகம் மட்டும் தான். மிகக் குறைவான விலையிலும் சில அம்மா உணவகங்களில் இலவசமாகவும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக ராகவா லாரன்ஸ் ரூபாய் 50 லட்சம் அளித்துள்ளார். இந்த இரண்டு பகுதியில்தான் சினிமா தொழிலாளர்கள் மிக அதிகம் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை ராகவா லாரன்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ராஜசேகர் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்களிடம் வழங்கியுள்ளார். இதனை அடுத்து ராகவா லாரன்ஸுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
 

More News

18 ஆயிரமாக உயர்ந்த கொரோனா நோயாளிகள்: ஊரடங்கையும் மீறி உயரும் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் ஓடிப்போய் காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி!

ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வரும் நிலையில் திருச்சி அருகே ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு

கொரோனா விடுமுறையில் அப்பாவின் பிறந்த நாளை கொண்டாடிய 'பாகுபலி' நடிகை

கொரோனா விடுமுறையில் சினிமா நட்சத்திரங்கள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருப்பதால் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.

பெண் போலீசாரிடம் ஆபாச பேச்சு: சஸ்பெண்ட் ஆன போலீஸ் எஸ்பி

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீசார் இரவு பகல் பாராமல் கண்காணிப்பு பணியில்

வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்: மனமுடைந்து தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவுகள் மிகக்கடுமையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.