'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் கனிக்கு இத்தனை லட்சம் பரிசுத்தொகையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பரபரப்பாக கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் 5 மணி நேரம் நடைபெற்றது என்பதும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கனி டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் ஷகிலா இரண்டாவது இடத்தையும் அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்
இந்த நிலையில் டைட்டில் பட்டம் பெற்ற கனிக்கு பரிசு பொருட்களும் பரிசுபணமும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டில் பட்டம் பெற்ற கனிக்கு ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பரிசும் அதுபோக சுமார் 19 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருட்களும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நிலையில் சக போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கனிக்கு தெரிவித்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சவுத் இந்தியன் உணவு வகைதான் செய்ய வேண்டுமென ஏற்கனவே தான் முடிவு செய்திருந்ததாகவும், அந்த வகையில் சிறப்பான சமையல் மற்றும் சிறப்பான பிரசன்டேஷன் ஆகிய இரண்டும் சேர்ந்து தனக்கு இந்த டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் கனி கூறியுள்ளார்
மேலும் கனி கொடுத்த பிரசன்டேஷன் கடந்த சீசனில் வனிதா விஜயகுமார் கொடுத்த பிரசண்டேஷனை விட ஒருபடி மேலாக இருந்ததாக நடுவர்களும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான், சிம்பு, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments