சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.3000 கோடியில் திட்டங்கள்!

  • IndiaGlitz, [Sunday,September 06 2020]

சென்னையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய உலக வங்கி உதவியுடன் ரூ.3000 கோடியில் திட்டங்களுக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த திட்டங்களை விரைவில் உலக வங்கி இறுதி செய்யும் என்ற தகவல் சென்னை மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கனமழை பெய்தாலும், கோடையில் தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடுகிறது. இதனை தவிர்க்க வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளத்தைத் தணிப்பதற்கும், கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்கும், சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையார் மற்றும் கோசஸ்தலையர் உள்ளிட்ட பல்வேறு நதிப் படுகைகளில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பெய்த சராசரி மழைப்பொழிவுவை கணக்கில் கொண்டு தண்ணீர் தேவைக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக WRD அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்நிலைகளை பாதுகாப்பது மட்டுமின்றி நிலத்தடி நீரை சேமிப்பதிலும் WRD இந்த திட்டத்தில் இணைக்கவுள்ளது.

சென்னையை சுற்றியுள்ள 60 நீர்நிலைகளின் சேமிப்பு திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 30 ஆண்டுகளில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கான நிதி உதவி இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்படும் என்றும், உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவில் சுமார் 30% முதல் கட்டத்தில் வெளியிடப்படும் என்றும், இந்த திட்டங்கள் ஒவ்வொரு கட்டமாக எடுத்து ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும், ”என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் சென்னையின் தண்ணீர்பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்படும் என தெரிகிறது.

More News

மைனா நந்தினியின் கர்ப்பிணி தோற்ற போட்டோஷூட்: இணையத்தில் வைரல்

சரவணன் மீனாட்சி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை மைனா நந்தினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது தெரிந்ததே.

5 ஆண்டுகளுக்கு பின் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்!

'நேரம்' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்

தமிழ் திரையுலகில் திடீரென கிளம்பிய இந்தி எதிர்ப்பு: வைரலாகும் புகைப்படங்கள்

இந்தியா முழுவதும் பேசக் கூடிய மொழியாக இந்தி இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி எதிர்ப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீச்சல் குளத்தில் மிதந்தபடி புத்தகம் படிக்கும் தனுஷ் நாயகி: வைரலாகும் புகைப்படம்

தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஒருவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் மிதந்தபடி புத்தகம் படிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு வேண்டுமா??? சுகாதாரத்துறை விளக்கம்!!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலே இனி கொரோனா பரிசோதனையை மக்கள்