ரூ.300 கோடி வசூல் செய்த 'கோட்' திரைப்படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டமா? அதிர்ச்சி தகவல்..!
- IndiaGlitz, [Thursday,September 12 2024]
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ஆறு நாட்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் இந்த படத்தின் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோட்’ திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தத்தை அடுத்து வசூலும் வாரி குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
‘கோட்’ திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் ஆறு நாட்களில் இந்த படம் ரூபாய் 318 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் போதிய வரவேற்பு தரவில்லை என்றும் 16 கோடி ரூபாய்க்கு இந்த படத்தின் உரிமை பெறப்பட்ட நிலையில் வெறும் 2.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்பு வெளியான விஜய் படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் பெற்ற போதிலும் ‘கோட்’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்பது விநியோகிஸ்தர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட பல இடங்களில் இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் என்று கூறப்படுகிறது.