கார்த்தி ரசிகர்களை தாக்கிய போலீசாருக்கு ரூ.3 லட்சம் அபராதம்!
- IndiaGlitz, [Saturday,June 18 2022]
கார்த்தி ரசிகர்களை தாக்கிய போலீசாருக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தூத்துகுடியில் கார்த்தி நடித்த திரைப்படத்தின் போஸ்டர்களை அவரது ரசிகர்கள் மூவர் ஒட்டியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் கார்த்தி ரசிகர்கள் அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கார்த்தி ரசிகர்கள் வெங்கடகோடி, வெங்கடேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர்.
இந்த புகார் மனுவை கடந்த சில ஆண்டுகளாக விசாரித்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்தி ரசிகர் மன்ற உறுப்பினர்களை போலீசார் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெங்கட கோடிக்கு 2 லட்ச ரூபாயும் மற்ற இருவருக்கும் தலா 50,000 ரூபாய் நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொகையை தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர், மத்திய காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடமிருந்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார்த்தி ரசிகர்களை தாக்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.