ரூ.3 கோடி மதிப்புள்ள பிறந்த நாள் கேக் வெட்டிய 'லெஜண்ட்' பட நடிகை.. பரிசளித்த பாடகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய கேக் வெட்டிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரெளட்டாலா தமிழில் ‘லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவர் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டினார். இந்த கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் அவருக்கு பரிசளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து ஒரு மியூசிக் ஆல்பத்தில் ஊர்வசி ரெளட்டாலா பாடிய நிலையில் இந்த தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாடகர் ஹனி சிங் அவர்களுக்கு நன்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி ரெளட்டாலா நன்றி தெரிவித்துள்ளார்.
ஊர்வசி ரெளட்டாலா குறித்தும் தங்க கேக் குறித்து யோ யோ ஹனி சிங் கூறியபோது ’என்னை பொறுத்தவரை ஊர்வசி உலகிலேயே மிக அழகான பெண், அதை நான் பலமுறை அவரிடமே கூறியிருக்கிறேன், அவர் மிகவும் அழகான பெண் என்பதால்தான் அவருக்கு நான் மூன்று கோடி மதிப்புள்ள தங்க கேக்கை பிறந்தநாளுக்கு பரிசாக அளித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout