பொள்ளாச்சி விவகாரம்: புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போதிலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்ததால்தான் இந்த விஷயம் தற்போது வெளியே தெரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலையும் மீறி புகார் அளித்த பெண்ணின் பெயரை போலீசார் கூறி அவரை பயமுறுத்தியது. அதுமட்டுமின்றி மேலும் பல பெண்கள் புகாரளிக்க வராமல் இருக்க போலீஸ் எடுத்த நடவடிக்கை இது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More News

இன்று விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம்: ஐதராபாத்தில் குவியும் திரையுலகினர்

நடிகர் விஷால்-அனிஷா திருமணம் குறித்த செய்திகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இன்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது

தமன்னா ஆணாக இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன்: பிரபல நடிகை

கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசனும், பிரபல நடிகையுமான தமன்னாவும் மிக நெருக்கமான தோழிகள் என்பது தெரிந்ததே.

சென்னையில் ஐபிஎல் டிக்கெட்டுக்காக விடிய விடிய காத்திருந்த இளைஞர்கள்

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுக்களை வாங்க சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் முன் விடிய விடிய இளைஞர்கள் பலர் வரிசை நின்றுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இணையாதது ஏன்? ஜெ.தீபா பேட்டி

அதிமுக, திமுக, தினகரன் கட்சி, கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி என ஐந்து முனை போட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உருவாகியுள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு

பப்ஜி விளையாடிய 6 கல்லூரி மாணவர்கள் கைது!

பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமையாவது மட்டுமின்றி மனதில் குற்றச்செயல்கள் செய்யும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து