கொரோனா காலத்திலும் குவிந்த முதலீடுகள்: முதல்வர் பழனிச்சாமிக்கு குவியும் பாராட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மத்திய அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் பொருளாதார சிக்கலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கொரோனா காலத்திலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சீரிய நடவடிக்கை காரணமாக ரூ.15,128 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் கொரோனா காலத்தில் ஈர்க்க முடியாத அளவுக்கு முதலீடுகளை ஈட்டிய தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த முதலீடுகள் மூலம் 47,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சென்னை பவர் ஜெனரேஷன் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 3000 கோடிக்கு முதலீடு செய்வதாகவும் இதனால் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிகிறது. அதேபோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐஜிஎல் இந்தியா டிரன்ஸ்பிளாண்டேஷன் சொல்யூஷன் பிரைவேட் இந்தியா என்ற நிறுவனம் தமிழகத்தில் 18 கோடி ரூபாய் முதலீடு செய்வதால் 30 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் விவிட் சோலியர் எனர்ஜி பிரைவைட் லிமிடெட் என்ற நிறுவனம் தமிழகத்தில் ரூ.2000 கோடி முதலீடு செய்வதால் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதும், அமெரிக்காவை சேர்ந்த எச்.டி.சி.ஐ டேட்டா ஹோல்டிங் சென்னை எல்எல்பி என்ற நிறுவனம் தமிழகத்தில் ரூ.2800 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் இதனை அடுத்து 200 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிகிறது.
அதேபோல் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த எஸ்.டி. டெலிமீடியா என்ற நிறுவனம் தமிழகத்தில் ரூ.1500 கோடி முதலீடு செய்வதாகவும் இதனால் 200 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெயட்லர் என்ற நிறுவனம் தமிழகத்தில் ரூ.210 கோடி முதலீடு செய்யவிருப்பதாகவும் இதனை அடுத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி இந்தியா பிரைவைட் லிமிடெட் என்ற ரூ.50 கோடிக்கு முதலீடு செய்வதால் இதன் மூலம் 130 பேருக்கு வேலை கிடைக்கும்.
மொத்தத்தில் தமிழகத்தில் 17 நிறுவனங்கள் ரூ.15,128 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் இதனை அடுத்து 47,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் வேலை இழப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய வேலை வாய்ப்புகள் தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது மட்டுமின்றி தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு மீது பெரும் மதிப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments