பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக கமல்ஹாசனுக்கு நடிக்க ரூ.150 கோடி சம்பளமா?
- IndiaGlitz, [Tuesday,May 30 2023]
உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க 150 கோடி சம்பளம் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் படத்திலும், அதன் பிறகு எச் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ப்ராஜெக்ட் கே’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசன் இந்த படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் தர ஒப்புக் கொண்டதாகவும், பிக் பாஸ் தமிழ் 7 முடிந்ததும், அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகிய பிரபலங்கள் நடிக்க உள்ள நிலையில் கமல்ஹாசனும் இணைந்தால் இந்த படம் மிகப்பெரிய பான் இந்திய படமாக உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா, மகேஷ் பாபு, திஷா பதானி ஆகியோர்களும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை போக போக பார்ப்போம்.