ரூ.1000 கோடி பட்ஜெட் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,April 04 2019]
இந்தியாவில் இதுவரை தயாரித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் ரஜினியின் '2.0' என்ற படம் தான். இதனை முறியடிக்கும் வகையில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 'மகாபாரதம்' படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கியது.
பீமனின் பார்வையில் மகாபாரத்தை சொல்லும் இந்த படம் 'ரண்டமூழம்' என்ற நாவலை மையமாக கொண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்டில், ''யு.ஏ.இ. எக்ஸ்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி. ஹெல்த்கேர்'' என்னும் நிறுவனத்தின் நிறுவனர் ரகுராம் ஷெட்டி தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் பீமனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படம் தற்போது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் ரகுராம் ஷெட்டி உறுதி செய்துள்ளார். 'ரண்டமூழம்' நாவலை எழுதிய எம்.டி.வாசுதேவன் நாயருக்கும் இந்த படத்தை இயக்குவதாக இருந்த ஸ்ரீகுமாருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடே இந்த படம் கைவிடப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.