ரூ.1000 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையா? வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ரூ.1000 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்த படத்தின் நாயகி ஒரு நீச்சல் வீராங்கனை என தெரியவந்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவான ’காந்தாரா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூபாய் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக சப்தமி கெளடா என்பவர் நடித்து இருந்தார் என்பதும் வனக்காவலராக நடித்த இவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்ததாகவும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சப்தமி கெளடா ஒரு நடிகை மட்டுமல்ல தேசிய அளவிலான நீச்சல் வீராங்கனை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சப்தமி கெளடாவின் இன்ஸ்டாகிராமில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்று பார்த்தால் அவர் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்ட தன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது தெரிய வருகிறது. இளம் வயதிலேயே இவர் நீச்சலில் ஈடுபாடு கொண்டவர் என்பது மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ’காந்தாரா’ திரைப்படத்தின் வெற்றி தன்னை எந்த வகையிலும் மாற்றவில்லை என்றும் இப்போது கூட நான் என் குடும்பத்துடன் என்னுடைய தனிப்பட்ட வேலையை நானே செய்து வருகிறேன் என்றும் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் சமீபத்தில் நடந்த அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com