பூஜா ஹெக்டேவின் அடுத்த படத்தின் செட் செலவு மட்டும் ரூ.100 கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Thursday,February 24 2022]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே நடித்துள்ள அடுத்த படத்துக்கு செட் செலவு மட்டும் 100 கோடி ரூபாய் என்ற தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே பிரபல நடிகர் பிரபாஸ் உடன் நடித்த திரைப்படம் ’ராதே ஷ்யாம்’. இந்த படத்தில் கடந்த 70களில் பீரியடு காட்சிகள் அதிகம் வருவதால் அந்த காட்சிகளுக்காக பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டதாகவும் செட் பணிகளுக்கு மட்டுமே 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

அதே போல் இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் அதற்காக இந்த படத்தில் கோடிக்கணக்கான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 350 கோடி என்ற நிலையில் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் செட் பணிகளுக்காகவே அதில் பாதிக்கும் மேல் செலவு செய்து உள்ளனர் .

‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மார்ச் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.