ரூ.100 கோடி வசூல் செய்தவுடன் தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் படம்.. தேதியை அறிவித்த ரெட் ஜெயண்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மலையாளத்தில் ரிலீசான ’பிரேமலு’ என்ற திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ் டப்பிங் வரும் 15ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிஷ் என்பவர் இயக்கத்தில் உருவான ’பிரேமலு’ என்ற திரைப்படம் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படம் இதுவரை எந்த மொழியிலும் டப்பிங் செய்யாமல் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுவதாக உள்ள கதை அம்சம் கொண்ட இந்த படம் தமிழகத்திலும் மலையாளத்திலேயே ரிலீஸ் ஆனது என்பது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் தமிழ் பதிப்பின் ரிலீஸ் தேதி மார்ச் 15 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியிருப்பதாகவும் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் வசூல் செய்த பின்னர் தமிழில் டப் செய்து வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் இன்னும் அதிகமாக வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் தமிழகத்தில் சக்கை போடு போட்டு வரும் நிலையில், ’பிரேமலு’ திரைப்படமும் ரிலீஸாக உள்ள நிலையில் தமிழக தியேட்டர்களை மலையாள திரைப்படங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Bringing to you the Malayalam BLOCKBUSTER #Premalu in Tamil, in cinemas near you on March 15th. ❤️🎉#PremaluTamil #LetsPremalu #PremaluMovie #Naslen #Mamitha #Girishad @BhavanaStudios #Dileeshpothan #Fahadhfaasil @MShenbagamoort3 #syampushkaran #vishnuvijay #suhailmkoya… pic.twitter.com/7Qjwf2PUat
— Red Giant Movies (@RedGiantMovies_) March 12, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com