சத்தம் போட்டால் ஒரு லட்சம் அபராதம், 5 வருடம் ஜெயில்: மும்பையில் அதிரடி
- IndiaGlitz, [Monday,August 27 2018]
அமைதியான சுற்றுச்சூழலை மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் விரும்புவதுண்டு. ஆனால் அதிகரித்து வரும் வாகனங்கள், தொழிற்சாலைகளால் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக பெருநகரங்களில் இரவில் கூட அதிக சப்தம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு மும்பையில் 110 இடங்களை அமைதிப்பகுதி என்று அறிவித்துள்ளது. பள்ளிகள் , மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ள இந்த 110 இடங்களில் பகலில் 50 டெசிபல், இரவில் 40 டெசிபலுக்கு மேல் சத்தம் எழுப்பினால் அவர்கள் தண்டனைக்குரியவர்களாக கருதப்படுவார்கள்.
இந்த அமைதிப்பகுதியில் குறிப்பிட்ட டெசிபலுக்கு மேல் சப்தம் எழுப்பினால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் மற்றும் ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மகராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.