2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை விமான நிலையத்தில் 2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் விமான நிலையத்தில் ஏற்றப்பட இருந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டபோது போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
வலி நிவாரண மாத்திரைகள் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும் 3 பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் போதைப்பொருள் மாத்திரை மற்றும் பவுடர் இருப்பது தெரிய வந்துள்ளது. 27 கிலோ எடையுள்ள இந்த போதைப் பொருளின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 2½ கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதையடுத்து பார்சலை அனுப்பியது யார்? அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் முகவரி யாருடையது என்பது போன்ற விசாரணையைத் தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் 2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதைப் போலவே இன்று காலை கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானத்திலும் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்கம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தரையிறங்கிய விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது கழிவறையில் தங்கம் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments