close
Choose your channels

'விடுதலை' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துவரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அதில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டண்ட் நடிகர் சுரேஷ் என்பவர் காலமானதை அடுத்து தயாரிப்பு நிறுவனம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’விடுதலை’ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் காலமானது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ’விடுதலை’ படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியை ஒன்று எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் காலமானார் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படப்பிடிப்பில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தும் சுரேஷை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் எங்களை விட்டுச் சென்றது மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் எங்களது இதயங்களில் மாறாத வலியாக இன்று இருக்கும் என்றும் மறைந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment