கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடு… தமிழக அரசு விளக்கம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் நிவாரணத்தொகை எப்போது வழங்கப்படும் எனக் கேட்டு சிலர் பொதுநல வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கில் ஆஜராகி பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில அரசு ஏற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இதுவரை 36,220 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருப்பதாகவும் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள் இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பிற மாநிலங்களில் கூடுதல் இழப்பீடு வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கூடுதலாக இழப்பீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

More News

இந்தப் பயணம் கடினமானது… புற்றுநோய் அனுபவத்தை பகிர்ந்த மனிஷா கொய்ராலா!

தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இயக்குநர் மணிரத்னத்தின்

எதற்கும் ஒரு எல்லையுண்டு… இந்திய அணியை வெளுத்து வாங்கிய கபில்தேவ்!

இந்தியா டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக்கடலில் இன்றைய தினம் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாவதால் தமிழகத்தில் அதிக கனமழை.

மழலை மொழி இனிதே… தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகை ஸ்ரேயா!

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண்.

முதல் மரியாதை கெட்டப்… இடுப்பில் டாட்டூ…  இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்