சிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆயிரம் தானங்களிலும் சிறந்த தானம், கல்வி தானம் எனப் பொதுவாக கூறப்படுவது உண்டு. காரணம் எந்த இக்கட்டான சூழலிலும் ஒருவரின் கல்வி அறிவு மட்டும் அவரை விட்டு போகவே போகாது. அப்படியான கல்வி அறிவை ஏழை மக்கள் இலவசமாக பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கோவையைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிப்பாளையம் எனும் பகுதியில் கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பள்ளி தற்போது நடுநிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அடுத்து உயர்நிலை படிப்பை தொடர வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்ல வேண்டும். எனவே இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பள்ளியை விரிவுப்படுத்த போதுமான இடவசதி இல்லை என அதிகாரிகள் பதில் அளித்து உள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள நிலத்தின் சொந்தக்காரரான ராமமூர்த்தி என்பவரின் அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்ற ராமமூர்த்தி 3 கோடி ரூபாய் சொத்து என்றுகூட யோசிக்காமல் தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்தை உடனே பள்ளி நிர்வாகத்திற்கு கொடுத்து விட்டார். இதனால் நடுநிலைப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக மாறப்போகிறது. உள்ளூரிலேயே குழந்தைகள் 12 ஆம் வகுப்பு வரை படிக்க முடியும். இந்நிலையில் சிறிதும் யோசிக்காமல் தனது நிலத்தை கொடுத்து உதவிய வள்ளல் ராமமூர்த்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout