120 மணிநேர ரெய்டில் 250 கோடி ரொக்கம்… இந்தியாவையே கதிகலங்க வைத்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த வியாபரி ஒருவரின் வீட்டில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 257 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 120 மணிநேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கட்டுக்கட்டாக குவியல் இருந்ததைப் பார்த்து அதிகாரிகளே வியந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
கான்பூரில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்து நடத்திவருபவர் பியூஷ் ஜெயின். இவர் வருமான வரிச்செலுத்தாமல் தொடர்ந்து பணத்தைப் பதுக்கி வைப்பதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து அகமதாபாத்தில் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்படி கானோஜ் மற்றும் கான்பூர் பகுதிகளில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வருவாய் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 18 லாக்கர் கொண்ட ரகசிய அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 500 சாவிகளுடன் கூடிய கொத்துச்சாவி சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.
இந்த லாக்கர்களை திறந்தபோது அதிகாரிகள் மெய்சிலிர்க்கும் வகையில் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பணத்தை எண்ண முடியாமல் அதிகாரிகள் வங்கியின் உதவியைப்பெற்று கரன்சி எண்ணும் மெஷினை வைத்து கிட்டத்தட்ட 120 மணிநேரம் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பியூஸ் ஜெயினிடம் கிட்டத்தட்ட 50 மணி நேரங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 16 இடங்களில் சொத்துகள் இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கான்பூர் 4, கனோஜ் 7, மும்பை 2, டெல்லி 1, துபாய் 2 போன்ற இடங்களில் சொத்துகள் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவையே அதிர வைத்துள்ள இந்த ரெய்டு சம்பவத்தில் பியூஸ் ஜெயினுக்குவாசனை திரவியம் தயாரிக்கும் தொழிலைத் தவிர 40 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பான் குட்கா போன்றவற்றை தயாரிக்கும் தொழில்சாலைகளும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout