வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துக் கொள்ளை!!!

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

 

வேலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருநாவுக்கரசு (43) என்பவரும் அவரது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் 2 உறவினர்கள் என அனைவரும் தீபாவளி அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் கதவை சாத்தாமல் அனைவரும் தூங்கி இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அனைவரது முகத்திலும் மயக்க ஸ்பிரேவை அடித்து இருக்கின்றனர். அனைவரும் மயக்கமான பின்பு அந்த வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த பணப் பெட்டி, நகைப்பெட்டி என அனைத்தையும் தூக்கிக்கொண்டு அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றிருக்கின்றனர்.

அந்த மொட்டை மாடியில் வைத்து பணம் மற்றும் நகையை மட்டும் வைத்துக்கொண்டு அந்த பெட்டிகளை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். காலை எப்போதும் போல தூங்கி எழுந்த திருநாவுக்கரசு பீரோ திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து பதறி இருக்கிறார். அதோடு மொட்டை மாடிக்குச் சென்ற போது பணப்பை பெட்டி எல்லாம் கிடந்து இருக்கிறது. இதையடுத்து வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

டீ குடிக்க சென்ற கேப்பில் அரசு பஸ்ஸை அபேஸ் செய்த வாலிபர்… போதையினால் ஏற்பட்ட பரபரப்பு!!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் டிரைவர் இல்லாமல் நின்றிருந்த அரசு பேருந்தை சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துபாயில் சஞ்சய்தத்தை சந்தித்த சூப்பர் ஸ்டார்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் என்பதும் அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

கார்த்தியின் அடுத்த பட பூஜை: இயக்குனர், இசையமைப்பாளர் யார்?

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது 'சுல்தான்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரயில்வே தண்டவாளத்தில் வேகமாக வந்த கார்: போதையில் இளம்பெண் செய்த அட்டகாசம்!

25 வயது இளம்பெண் ஒருவர் போதையில் ரயில்வே தண்டவாளத்தில் காரை மிக வேகமாக ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

உங்ககிட்ட இருந்து நான் கத்துகிடனும்: சனம்ஷெட்டியை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கே அறியாமல் கலாய்த்து அந்த தவறை உணர்த்தும் வல்லமை படைத்தவர் கமலஹாசன் என்பதை கடந்த நான்கு சீசன்களில் நாம் பார்த்து வருகிறோம்.