சரத்குமார்-ராதிகா நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம். ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

விக்ரம்பிரபு, கீர்த்திசுரேஷ் நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' என்ற படத்தை தயாரித்த ராதிகா, சரத்குமார் ஆகியோர்களின் நிறுவனமான மேஜிக் பிரேம்ஸ், கடந்த 2014ஆம் ஆண்டு ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் ரூ.2.5 கோடி கடன் பெற்றுள்ளது.

இந்த கடனுக்கு ஈடாக இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் அடுத்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததோடு, தி.நகர் வீட்டையும் ராதிகா-சரத்குமார் தம்பதியினர் அடமானமாக வைத்தனர்.

இந்த நிலையில் மேஜிக் நிறுவனத்தின் அடுத்த படமான 'பாம்பு சட்டை' படத்தின் தொலைக்காட்சி உரிமையை வழங்காததுடன், அடமானம் வைத்த வீட்டையும் விற்க முயற்சி செய்ததாக சரத்குமார்-ராதிகா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து ராடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கடனுக்காக அடமானம் வைத்த சொத்துகளை சரத்குமாரும், ராதிகாவும் விற்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி ராதிகா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி வி.பார்த்திபன், 'ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து, ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையை வரும் ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் இருவரும் ராடியன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் எனவும், மேலும் ராடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

More News

ஓவியாவை புரட்சி தலைவியாக மாற்றிய ரசிகர்கள்

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பேர்களின் நேயர்களை மிகவும் கவர்ந்த பங்கேற்பாளராக ஓவியா திகழ்ந்து வருகிறார்.

திருப்பதியில் அஜித் சாமி தரிசனம்

தல அஜித் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் திருப்பதி சென்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளாராக வெங்கையா நாயுடு அறிவிப்பு

இந்திய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. பதிவான வாக்குகள் வரும் 20ஆம் தேதி டெல்லியில் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது...

பிக்பாஸ் குடும்பத்தின் புதிய தலைவருக்கான வித்தியாசமான போட்டி

பிக்பாஸ் குடும்பத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களில் ஒருவரை வாரம் ஒருமுறை தலைவராக்கும் விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சினேகன், காயத்ரி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் இதுவரை தலைவராக பணிபுரிந்திருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவர் தேர்வு நடைபெற்றது....

'விக்ரம் வேதா' ரன்னிங் டைம்

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...