சரத்குமார்-ராதிகா நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம். ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம்பிரபு, கீர்த்திசுரேஷ் நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' என்ற படத்தை தயாரித்த ராதிகா, சரத்குமார் ஆகியோர்களின் நிறுவனமான மேஜிக் பிரேம்ஸ், கடந்த 2014ஆம் ஆண்டு ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் ரூ.2.5 கோடி கடன் பெற்றுள்ளது.
இந்த கடனுக்கு ஈடாக இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் அடுத்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததோடு, தி.நகர் வீட்டையும் ராதிகா-சரத்குமார் தம்பதியினர் அடமானமாக வைத்தனர்.
இந்த நிலையில் மேஜிக் நிறுவனத்தின் அடுத்த படமான 'பாம்பு சட்டை' படத்தின் தொலைக்காட்சி உரிமையை வழங்காததுடன், அடமானம் வைத்த வீட்டையும் விற்க முயற்சி செய்ததாக சரத்குமார்-ராதிகா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து ராடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கடனுக்காக அடமானம் வைத்த சொத்துகளை சரத்குமாரும், ராதிகாவும் விற்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி ராதிகா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி வி.பார்த்திபன், 'ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து, ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையை வரும் ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் இருவரும் ராடியன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் எனவும், மேலும் ராடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout