சென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.18.24 மதிப்பிலான சுகாதார மையக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார். மற்றும் திருத்தணியில் அமையவிருக்கும் ரூ. 109.68 கோடி மதிப்பிலான குடிநீர் மேம்பாட்டு திட்டத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார். தமிழக அரசு பல்வேறு திட்டப்பணிகளைத் தற்போது தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. கொரோனா காலத்தில் கட்டிட மேம்பாட்டு பணிகள், சாலை சீரமைப்பு மற்றும் பூமிக்குள் அடியில் கட்டவேண்டிய கட்டிடப்பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் சென்னையில் தண்டையார் பேட்டை அடுத்த வி.ஆர் நகர், திருவிக நகர் பகுதியில் உள்ள புளியந்தோப்பு, ஜிகேஎம் காலனியின் பெருங்குடி மற்றும் மடிப்பாக்கம் போன்ற 5 இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.18.24 கோடி மதிப்பிலான சுகாதார மையக் கட்டிடங்களை முதல்வர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் எனக் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் திருத்தணி நகராட்சி பகுதியில் நல்ல முறையிலான குடிநீர் வசதி செய்துதருமாறு அந்நகராட்சி நிர்வாகம் சார்பாக கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக திருத்தணியில் ரூ.109.68 கோடி மதிப்பிலான சீரமைப்பு பணிகள் தொடங்கவிருக்கிறது. அப்பணிகளை தமிழக முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார் எனவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர சென்னையின் திருவொற்றியூர் பிரதான சாலை, மணிலியில் விரைவு சாலை போன்ற பல்வேறு செயல் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments