'இயேசு அழைக்கிறார்' அமைப்பில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத முதலீடுகள் இத்தனை கோடியா?
- IndiaGlitz, [Saturday,January 23 2021]
கடந்த மூன்று நாட்களாக ’இயேசு அழைக்கிறார்’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மூன்று நாள் சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த சோதனையின் கிடைத்த ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத தொகை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
‘இயேசு அழைக்கிறார்’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 120 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கோவை காருண்யா பல்கலைக் கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
இதனை அடுத்து விசாரணைக்கு ஆஜராக மதபோதகர் பால்தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும் இந்த சம்மனை ஏற்று அவர் விரைவில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
‘இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பில் நடத்திய வருமானவரித்துறை சோதனையில் 120 கோடி கணக்கில் வராத முதலீடுகள் மற்றும் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது