கொரோனாவால் வேலை இழந்து வாடிய இளைஞருக்கு அடித்தது லாட்டரி… சுவாரசியத் தகவல்!!!
- IndiaGlitz, [Wednesday,September 23 2020]
கேரளாவில் கொரோனாவால் வேலையிழந்த ஒரு இளைஞருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்து இருக்கிறது. தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுக்கான விற்பனை தடை செய்யப்பட்டு இருந்தாலும் கேரளாவில் லாட்டரி விற்பனை எப்போதும் சூடு பிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஓணம் சிறப்பு பம்பர் குலுக்கல் லாட்டரியில் ஒரு இளைஞருக்கு ரூ.12 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 24 இளைஞர் அனந்து விஜயன். குடும்ப வறுமை காரணமாக தனது படிப்பைக்கூடத் தொடர முடியாத இவர் டீக்கடையில் வேலைப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக எழுத்தர் பணியை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் அந்த வேலையையும் இவர் இழந்து இருக்கிறார். எப்போதும் அதிர்ஷ்டததை நம்பி அனந்து லாட்டரி டிக்கெட்டை வாங்குவது வழக்கமாம்.
அப்படி வாங்கிய லாட்டரி டிக்கெட்டால் தற்போது ரூ.12 கோடிக்கு சொந்தக் காரராக மாறியிருக்கிறார். வேலை இழந்து குடும்ப வறுமையில் உழன்ற இளைஞர் ஒரே நாள் இரவில் கோடிஷ்வரனாக மாறியச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.