சுஜித் மீட்புப்பணிக்கு ஆனா செலவு எத்தனை கோடி? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், நான்கு நாட்கள் அந்த சிறுவனை மீட்க பல துறையினர் போராடி வந்தனர். காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும், மத்திய தேசிய பாதுகாப்பு படையினர், மாநில தேசிய மீட்பு குழுவினர், ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் உள்பட பல துறையினர் சுஜித்தை மீட்பதற்காக இரவு பகலாக போராடினார். இருப்பினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் சுஜித்தை பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.
இந்த நிலையில் சுஜித்தை மிட்க எடுக்க நடவடிக்கைகளில் பல்வேறு உபகரணங்கள், இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டதன் காரணமாக மீட்பு பணிக்காக ரூபாய் 11 கோடி செலவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேரிடர் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சுஜித்தை மீட்க ரூ.11 கோடி செலவானதாக பரவி வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும், பேரிடர் மீட்பு முயற்சியில் பணம் ஒரு பொருட்டாக இருக்காது என்றும், யாரும் இதுவரை பில் கேட்டு வரவில்லை என்றும், இது முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கடந்த சில மணி நேரங்களாக பரவிவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments