சுஜித் மீட்புப்பணிக்கு ஆனா செலவு எத்தனை கோடி? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், நான்கு நாட்கள் அந்த சிறுவனை மீட்க பல துறையினர் போராடி வந்தனர். காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும், மத்திய தேசிய பாதுகாப்பு படையினர், மாநில தேசிய மீட்பு குழுவினர், ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் உள்பட பல துறையினர் சுஜித்தை மீட்பதற்காக இரவு பகலாக போராடினார். இருப்பினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் சுஜித்தை பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.

இந்த நிலையில் சுஜித்தை மிட்க எடுக்க நடவடிக்கைகளில் பல்வேறு உபகரணங்கள், இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டதன் காரணமாக மீட்பு பணிக்காக ரூபாய் 11 கோடி செலவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேரிடர் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சுஜித்தை மீட்க ரூ.11 கோடி செலவானதாக பரவி வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும், பேரிடர் மீட்பு முயற்சியில் பணம் ஒரு பொருட்டாக இருக்காது என்றும், யாரும் இதுவரை பில் கேட்டு வரவில்லை என்றும், இது முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கடந்த சில மணி நேரங்களாக பரவிவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு  முதல் பத்து திரைப்படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள் நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

ரஜினியை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியல் களத்தில் குதிக்க உள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர் 

ரஜினி-கமல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி குறித்த முக்கிய தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்தும், திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்தும் நவம்பர் 7 முதல் 9 வரை

பெற்றோர்களின் அலட்சியத்தால் மேலும் ஒரு குழந்தை பலி!

ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக வைத்திருந்ததால் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவனின் மரணம், டிவி பார்த்து கொண்டிருந்த நேரத்தில் தூத்துகுடியில்

குறைகிறது ஆண்களின் திருமண வயது! இனி பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 18 என்பதும், ஆண்களின் திருமண வயது 21 என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இருபாலருக்கும் வாக்களிக்க 18 வயது இருந்தால்