அடிஉதைக்கு ரூ.5,000 கொலைக்கு ரூ.55,000… பதைக்க வைக்கும் Gangster Price list புகைப்படம்!!!

  • IndiaGlitz, [Thursday,November 05 2020]

 

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சமூக வலைத்தளத்தில் திடுக்கிடும் போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார். அதில் யாரையாவது மிரட்ட வேண்டுமா? ரூ.1,000 கொடுத்தால் போதும், அதேபோல அடிக்க வேண்டுமா? அதற்கு ரூ.5,000, காயப்படுத்த வேண்டுமா? அதற்கு ரூ.10,000 ஒட்டுமொத்தமாக கொலை செய்ய வேண்டுமா? அதற்கு ரூ.55,000 அவ்வளவுதாங்க ரேட்டு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பதறி இருக்கின்றனர்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய இந்த புகைப்படத்தை பதிவிட்டது யார் என்ற தேடுதல் வேட்டையைத் தற்போது போலீசார் துவங்கி உள்ளனர். அதில் சரதவல் எனும் காவல் நிலையப் பகுதியில் உள்ள சவுக்கடா எனும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்தான் இப்படி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞருக்கு சம்பந்தப்பட்ட கும்பல் ஒன்று அப்பகுதியில் பல நாட்களாக இதுபோன்ற வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த Gangster கும்பல் அடி, உதை, மிரட்டல், காயப்படுத்தி தாக்குவது, அதோடு கொலை செய்வது போன்ற ஒவ்வொரு அடியாள் வேலைக்கும் எவ்வளவு பணம் வாங்கப்படும் என்பது போன்ற குறிப்புகளோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஒரு இளைஞர் தனது கையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளார்.

மேலும் பார்ப்பதற்கு அந்த இளைஞர் சிறுவன் போல காட்சியளிக்கிறார். இந்நிலையில் உண்மையிலேயே இப்படி ஒரு கும்பல் செயல்படுகிறதா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை Gangster கும்பலைச் சேர்ந்த ஒருவரும் போலீசிடம் மாட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வடிவேலு ஸ்டைலில் ஒட்டகப்பால் டீ… கடையையே தரை மட்டமாக்கிய சம்பவம்!

புதுச்சேரி மாநிலத்தில் மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள் பேக்கரிக்குச் சென்று ஒட்டகப்பால் டீ கேட்ட சம்பவம் கடும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

'கமல்ஹாசன் 232' படம் குறித்த பரபரப்பான அறிவிப்பு!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் 232வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதா? பரபரப்பு தகவல்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது தெரிந்ததே.

நடிகர் சூரி பதிவு செய்த நிலமோசடி வழக்கில் திடீர் திருப்பம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூரி, நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா என்பவர் மீது நிலமோசடி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.