பத்திரிகை, ஊடகத்துறைக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை … முதல்வர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னதாக கொரோனா நேரத்தில் மக்களுக்காக சேவை ஆற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி காட்டினார். அதைப் போலவே தற்போது பத்திரிக்கை, ஊடகத்துறையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையை அதிகப்படுத்தி அதிரடி உத்தரவு வெளியிட்டு உள்ளார்.
கொரோனா நேரத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பிற்கு பத்திரிக்கை, செய்திதுறை பணியாளர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்-புகைப்படக்காரர்கள்-ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.#COVID19 தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்தம் வாரிசுதாரருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.
ஊடகவியலாளர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்! pic.twitter.com/nVZFlrZVj1
— M.K.Stalin (@mkstalin) May 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com