பத்திரிகை, ஊடகத்துறைக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை … முதல்வர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

முன்னதாக கொரோனா நேரத்தில் மக்களுக்காக சேவை ஆற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி காட்டினார். அதைப் போலவே தற்போது பத்திரிக்கை, ஊடகத்துறையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையை அதிகப்படுத்தி அதிரடி உத்தரவு வெளியிட்டு உள்ளார்.

கொரோனா நேரத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பிற்கு பத்திரிக்கை, செய்திதுறை பணியாளர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்-புகைப்படக்காரர்கள்-ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.#COVID19 தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்தம் வாரிசுதாரருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

ஊடகவியலாளர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்! pic.twitter.com/nVZFlrZVj1

— M.K.Stalin (@mkstalin) May 26, 2021

More News

ஒரு பாடலாசிரியருக்கு ஆதரவா இத்தனை பேர் ஏன் பொங்குறாங்க? சின்மயி கேள்வி

ஒருபக்கம் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து குறித்து தான் எழுப்பிய

தமிழகத்தில் மே 31க்கு பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கா? முதல்வர் சொல்வது என்ன?

தமிழகத்தில் மே 31க்குப் பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

வைரலாகும் மீம் கோகுலின் குடும்ப புகைப்படம்!

மீம் கலைஞராக இருப்பவர் என்று சொல்வதைவிட 'மானாட மயிலாட' கோகுல் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலில் பேசுபவர் கோகுல் தான் என்றும் கூறப்படுவதுண்டு

கண்ணாடி அதன் முன்னாடி: கஸ்தூரியின் லேட்டஸ்ட் செல்பி!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் திரைப்பட செய்திகள் மட்டுமின்றி சமூக அரசியல் கருத்துக்களையும்

58 வயதில் வேற லெவல் வொர்க்-அவுட்: ராதிகாவின் வைரல் வீடியோ

கடந்த 1978ஆம் ஆண்டு பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக