ஆஸ்கர் விருதை நெருங்கிய 'ஆர்.ஆர்.ஆர்' : எந்த பிரிவில் தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,December 22 2022]
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விருதுக்காக ஒவ்வொரு நாட்டிலும் இருந்து திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்படவில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் உலக மக்களின் செல்வாக்கு பெற்ற படங்கள் என்ற முறையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மொத்தம் 14 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுக்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற திரைப்படம் ஷார்ட்லிஸ்டட்டில் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரிவில் மொத்தம் 81 பாடல்கள் இடம்பெற்று இருந்து நிலையில் தற்போது 15 பாடல்கள் கொண்ட பட்டியலில் ஒன்றாக ’நாட்டு நாட்டு’ இடம்பெற்றுள்ளதாகவும் இதனை அடுத்து ஆஸ்கர் விருதை ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு இந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#NaatuNaatu got shortlisted ??????
— Thyview (@Thyview) December 21, 2022
Congratulations @mmkeeravaani Gaaru #RRRforOscars pic.twitter.com/XjubBtgeGD