ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் அனிருத்: 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 'நட்பு' பாடல் ரிலீஸ்

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இந்த படத்தின் பாடல் ஆகஸ்டு 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

நட்பு தினமான இன்று இந்த பாடல் ’நட்பு’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் அனிருத் மற்றும் அமித் திரிவேதி, விஜய் யேசுதாஸ், ஹேமா ஆகியோர் இந்த பாடலில் தோன்றியுள்ளனர்

எம்எம் கீரவாணி இசையில் மதன் கார்க்கி பாடல் வரிகளில் அனிருத் பாடிய இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் இன்று வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.