'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது: எம்.எம்.கீரவானிக்கு குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்த பாடலுக்கு இசையமைத்த எம் எம் கீரவாணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கடந்த சில மணி நேரங்களாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது என்பதும் இதில் தமிழில் உருவான இந்த ‘The Elephant Whisperers' என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசையமைத்த எம்எம் கீரவாணி இந்த விருதை பெறுகிறார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
எம்.எம்.கீரவாணி ஆஸ்கர் விருதை வாங்கும்போது இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இசையமைப்பாளர் கீரவாணியுடன் இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ் அவர்களும் ஆஸ்கர் விருதை வென்றார். விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் மேடையில் பேசும்போது, ராஜமவுலிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இந்தியாவின் பெருமை என்றும் குறிப்பிட்டார்.
"Naatu Naatu" from #RRR wins Best Original Song at the #Oscars. https://t.co/ndiKiHfmID pic.twitter.com/d7ZSoRps2d
— Variety (@Variety) March 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com