ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' பட நாயகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
எஸ்எஸ் ராஜமெளலி இயக்கி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியான ஆலியா பட் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், மருத்துவரின் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஆலியா பட் கூறியுள்ளார்.
மேலும் தான் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் ஆலியா பட் காதலர் ரன்பீர்கபூர் ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும், சிகிச்சைக்கு பின் இருவரும் குணமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout