'ஆர்.ஆர்.ஆர்' ஹீரோவின் அடுத்த படத்தில் அனிருத்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் என்டிஆரின் 30 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை கொரடலா சிவா இயக்கவுள்ளார். சிரஞ்சீவி நடித்த ’ஆச்சாரியா’ திரைப்படத்தை அடுத்து கொரட்டாலா சிவா இயக்கவுள்ள இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அனிருத் இசையமைப்பாளராகவும், ரத்னவேலு ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் சாபு சிரில் கலை இயக்குனராகவும் பணிபுரியவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பவன்கல்யாண், நானி நடித்த தெலுங்கு திரைப்படங்களுக்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Excited and pumped for #NTR30 with my brother @tarak9999 in a #KoratalaSiva directorial ??????
— Anirudh Ravichander (@anirudhofficial) May 19, 2022
Let the fireworks begin??????#HappyBirthdayNTR@NANDAMURIKALYAN @RathnaveluDop @sabucyril @sreekar_prasad @NTRArtsOfficial @YuvasudhaArts pic.twitter.com/7OYBI5vl0G
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments