'ஆர்.ஆர்.ஆர்' ஹீரோவின் அடுத்த படத்தில் அனிருத்: வைரல் வீடியோ

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆரின் 30 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை கொரடலா சிவா இயக்கவுள்ளார். சிரஞ்சீவி நடித்த ’ஆச்சாரியா’ திரைப்படத்தை அடுத்து கொரட்டாலா சிவா இயக்கவுள்ள இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அனிருத் இசையமைப்பாளராகவும், ரத்னவேலு ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் சாபு சிரில் கலை இயக்குனராகவும் பணிபுரியவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பவன்கல்யாண், நானி நடித்த தெலுங்கு திரைப்படங்களுக்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதை பார்க்கும்போதெல்லாம் என் இதயம் புன்னகைக்கும்: சமந்தா எடுத்த செம புகைப்படங்கள்!

பிரபல நடிகை சமந்தா தற்போது காஷ்மீரில் விஜய்தேவரகொண்டா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் காஷ்மீரின் கொள்ளை அழகு புகைப்படங்களை

பிக்பாஸ் பாவனியை என்னய்யா செய்கிறார் அமீர்? வைரல் வீடியோ

பிக்பாஸ் பாவனிக்கு பிக்பாஸ் அமீர் வொர்க்அவுட் செய்ய உதவி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

எங்களது எலக்ட்ரானின் இசை குரு காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!

எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் என்ற புகழை பெற்ற ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் காலமான  நிலையில் அவரது மறைவுக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் 

'தி லெஜண்ட்' படத்தின் வாடிவாசல் பாடல்: செம கலர்புல் என குவியும் பாராட்டு!

 சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட்' சரவணன் நடிப்பில் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

விமானம் பறக்க… 5 நிமிட கரகோஷத்தில் நனைந்த நடிகர் டாம் குரூஸ்… நெகிழ்ச்சி தருணம்!

பிரான்ஸ் நகரில் 75 ஆவது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.