ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் 'ஆர்.ஆர்.ஆர்': இந்திய திரையுலகினர் ஆச்சரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த படம் இதுவரை 710 கோடி வசூல் செய்து விட்டதாகவும் விரைவில் 1000 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்திய திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் 710 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் 560 கோடி வசூல் செய்துள்ளதாகவும் பாகுபலி-2 படத்தை அடுத்து மிகப்பெரிய வசூலை இந்த படம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
மேலும் இந்தியில் மட்டும் இந்த படம் 131 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் ஒரிஜினல் திரைப்படங்களை விட அதிக வசூலை ஒரு டப்பிங் படம் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளார்.
இந்த நிலையில் ரூ.710 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்தும் இன்னும் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்த படத்தின் வசூல் 1000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'RRR' IS UNSTOPPABLE, UNSHAKEABLE... *#Worldwide* Week 1 Gross BOC: ₹ 710 cr... *#India* Gross BOC: ₹ 560 cr... Next to #Baahubali2. #RRR #RRRMovie pic.twitter.com/4F2M7kjflp
— taran adarsh (@taran_adarsh) April 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments