'ஆர்.ஆர்.ஆர்' பட நடிகைக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாகவும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஆலியா பட். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து அடுத்த மாதமே கர்ப்பமான நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து ரன்பீர்கபூர் - ஆலியா பட் தம்பதிக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் ஆலியா பட் நடித்துள்ளார். சமீபத்தில் ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் நடித்த ‘பிரம்மாஸ்திரா’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலியா பட் தற்போது இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.