சென்னை ராயபுரத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: மற்ற இடங்களில் எப்படி?
- IndiaGlitz, [Tuesday,April 14 2020]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தமிழகத்தில் மிக அதிகமாக சென்னையில் மட்டும் 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதில் மிக அதிகமாக ராயபுரம் பகுதியில் 63 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது
இதனை அடுத்து திருவிக நகரில் 28 பேர்களும், கோடம்பாக்கத்தில் 23 பேர்களும், அண்ணாநகரில் 22 பேர்களும், தண்டையார்பேட்டையில் 19 பேர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அடையார் மற்றும் பெருங்குடி பகுதிகளில் தலா 7 பேர்களும் திருவொற்றியூர் பகுதியில் 4 பேர்களும் மாதவரம் பகுதியில் 3 பேர்களும் வளசரவாக்கம் பகுதியில் 5 பேர்களும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் தலா 2 பேர் கொள்ளும் வைரஸால் தாக்கப்பட்ட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Here's the zone wise breakup of Covid-19 positive cases in #Chennai.#Covid19Chennai#GCC #ChennaiCorporation pic.twitter.com/cb4WOwB7hj
— Greater Chennai Corporation (@chennaicorp) April 14, 2020