மீண்டும் முதலிடத்தை பிடித்த ராயபுரம்: கருஞ்சிவப்பு பகுதியாக அறிவிப்பு

சென்னையில் கடந்த சில வாரங்களாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கைந்து நாட்களாக ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தை பிடித்தது. கோடம்பாக்கம் பகுதியும் ராயபுரத்தை பின்னாலேயே துரத்தி கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை மாநகராட்சி மண்டலவாரியான கொரோனா பாதிப்பு குறித்த தகவலை அளித்துள்ளது. இதன்படி இன்று மீண்டும் ராயபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. கோடம்பாகத்தில் 563 பேர்களும், திருவிக நகரில் 519 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனாம்பேட்டையில் 360 பேர்களும், வளசரவாக்கத்தில் 274 பேர்களும், அண்ணா நகரில் 248 பேர்களும், தண்டையார்பேட்டையில் 231 பேர்களும், அம்பத்தூரில் 167 பேர்களும், அடையாறில் 159 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக சோளிங்கநல்லூரில் 25 பேர்களும், ஆலந்தூரில் 25 பேர்களும், மணலியில் 27 பேர்களும், பெருங்குடியில் 35பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.